Thursday, 13 October 2016

சிவகார்த்திகேயன் அழுகை... ரெமோ படத்துக்கு நல்லதா... கெட்டதா?



சிவகார்த்திகேயன் நடித்து அண்மையில் வெளியான ரெமோ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ரெமோ படத்தின் வெற்றிக்குக் காரணம் ஊடகங்கள்தான் என்று நம்பும் சிவகார்த்திகேயன் மற்றும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் நன்றி விழா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ரெமோ படக்குழுவினர் அனைவரும் மேடையில் வீற்றிருக்க, சிவகார்த்திகேயன் பேசும்போது, தனக்கு சிலர் நெருக்கடி கொடுப்பதாக சொல்லி கண்ணீர்விட்டார்.

மேலும்...
http://tamilscreen.com/sivakarthikeyan-sentiment-2/

Wednesday, 12 October 2016

சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி… வேடிக்கைப் பார்க்கும் நடிகர் சங்கம்….




சிவகார்த்திகேயனுக்கும்… 24 AM STUDIOS  தயாரிப்பாளரும் சிவகாரத்திகேயனின் நண்பருமான ஆர்.டி.ராஜாவுக்கும் ரெமோ ரிலீஸுக்கு முந்தைய நாள் பிரச்சனை.
சிவகார்த்திகேயனின் மனைவி கணக்கு கேட்டதால் நட்பு முறிந்தது.
ரெமோ படம் 8 கோடி ரூபாய் டெபிஸீட்டில் ரிலீஸ் ஆகியிருக்கிறது…
ஏ.எம்.ரத்னம் 8 கோடி கொடுத்ததால்தான் படமே ரிலீஸ் ஆனது. இல்லை என்றால் ரெமோ படமும் ரஜினி முருகன் படம் போல் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் போயிருக்கும்…
சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே  குறைவான வசூல் இந்தப்படத்துக்குத்தான்…

– என ரெமோ படம் குறித்து செய்திகளும்… வதந்திகளும் காதுக்கு வந்து கொண்டே இருக்க….


மேலும்...

http://tamilscreen.com/remothanksgivingmeet/

Tuesday, 11 October 2016

சினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக.



சினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக.
என் கதை’  
ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…
அத்தியாயம் – 23

படம் எடுக்கப் பணம்தான் மூலதனம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நானும் அப்படித்தான்- பணம் இருந்தால்தான் படம் எடுக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் பல பேர் கையில் பத்து பைசா இல்லாமலேயே தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த உண்மை ஆரம்பத்தில் எனக்குத் தெரியாது.
நான் சொல்லப் போகும் இந்த சம்பவத்துக்குப் பிறகே தெரிந்து கொண்டேன்.
கையில் பணம் இல்லாமல் படம் எடுக்க வருபவர்கள் நம்புவது என்னைப் போன்ற நடிகைகளைத்தான். அதாவது எங்களின் உடம்பை.

நாங்கள்தான் அவர்களுக்கு அட்சய பாத்திரம்.

மேலும்...

http://tamilscreen.com/enkathai23/

ரீல் ஹீரோ படங்களுக்கு மத்தியில் 100 கோடி வசூலித்த ரியல் ஹீரோ படம்..



என்னதான் ரீல் ஹீரோக்களை மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடினாலும் ரியல் ஹீரோக்களையும் கொண்டாட மறப்பதில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘எம்.எஸ்.தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது.

அந்தப் படத்தைத்தயாரித்தவர்களே இப்படி ஒரு வரவேற்பும் வசூல்மழையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மேலும்...
http://tamilscreen.com/msdhoni-collection/

அடுத்த முதல்வர் அஜித்…. – ஆர்வக்கோளாறு ரசிகர்களின் வேலையா? அஜித்தின் அடிமன ஆசையா?



சினிமாவில் ஒன்றிரண்டு காட்சிகளில் அதுவும் அவுட்ஆஃப் போகஸில் தலைகாட்டிய விருச்சிககாந்த்களுக்கே அரசியலில் நுழைந்து முதல் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருக்கும்போது, தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித்குமாருக்கு முதல் அமைச்சர் ஆசை இல்லாமல் இருக்குமா?
அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று கிராமத்துப் பக்கம் சொல்வார்கள்.

மேலும்...
http://tamilscreen.com/ajith-next-cm/

றெக்க – விமர்சனம்


தமிழ்சினிமாவின் கதாநாயக இலக்கணத்துக்குள் அடங்காத ஹீரோவாக… யதார்த்தமான கதைகளில்… கதாபாத்திரங்களில் நடித்தே ரசிகர்களை சேர்த்த விஜய்சேதுபதிக்கு ஆக்ஷன் ஹீரோவாய் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது.
றெக்க…. மொக்க…. என்று ரைமிங்காக யாரும் கமெண்ட் அடித்துவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வோடு பக்கா கமர்ஷியலாய் ஒரு கதை பண்ணி, விஜய்சேதுபதியை மாஸ் ஹீரோவாக ‘றெக்க’ கட்டி பறக்கவிட்டிருக்கிறார் இயக்குநர் ரத்தின சிவா.

காதலர்களுக்கு வீட்டில் எத்தனை எதிர்ப்புவந்தாலும் அதையும் மீறி அவர்களை சேர்த்து வைப்பதுதான் வக்கீல் விஜய்சேதுபதியின் வேலை.

மேலும்...

http://tamilscreen.com/rekka-review/

தேவி – விமர்சனம்


ஏறக்குறைய பேய்ப்பட சீசன் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்ட நேரத்தில் தேவி என்றொரு பேய்ப்படத்தை எடுத்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.
என்ன தைரியத்தில் இப்படியொரு படத்தை எடுத்தார் என்றே தெரியவில்லை.
பேய்ப்படம் என்றால் பார்வையாளனை அலற வைக்க வேண்டும்.
தேவி படமோ அலற வைக்காமல், எப்படா படம் முடியும் என்று அழ வைக்கிறது.

12 வருடங்களுக்கு முன்பே மார்க்கெட் இழந்த பிரபுதேவா ஹீரோ.

மேலும்...
http://tamilscreen.com/devi-review/

ரெமோ – விமர்சனம்



நிச்சயமான பெண்ணை காதலிப்பவன் நிஜ வாழ்க்கையில் கெட்டவன். சினிமாவிலோ ஹீரோ.
தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (ஹிந்தி), மின்னலே, காதல் மன்னன் என்று பல படங்களில் பார்த்த பழைய கதைக்கு அவ்வை சண்முகி, ஆணழகன் மேக்கப் போட்டு ‘ரெமோ’வாக்கி இருக்கிறார் அட்லீயின் சிஷ்யரான அறிமுக இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்.

நாடகத்தில் நடித்து காலம் தள்ளிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசை.

மேலும்...
http://tamilscreen.com/remo-review/

அம்மா ஐ.சி.யூ.வில்… – ஆனாலும் ‘வரிவிலக்கு வசூல் வேட்டை’ தொடர்கிறது…



தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று மு.கருணாநிதி தொடங்கி வைத்த வியாபாரம்தான் இந்த – வரிவிலக்கு வசூல் வேட்டை.
ஏறக்குறைய சதுரங்க வேட்டைக்கு சற்றும்  சளைத்தது அல்ல, இந்த வரிவிலக்கு வசூல் வேட்டை.
வணிகவரித்துறையின் அமைச்சர் தொடங்கி, அதிகாரிகள், பியூன் வரை செமத்தியாய் கல்லா கட்டுகிற பிசினஸ் இது.

தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தி.மு.க.ஆட்சியில் கருணாநிதி அறிவிக்க, வணிகவரித்துறை அமைச்சருக்கு அது அட்ஷய பாத்திரமாக மாறியது.

மேலும்...
http://tamilscreen.com/taxfree-for-released-movies-2/