Tuesday, 1 November 2016

நடிகர் நாசர் எடுத்த ஆவணப்படம்…



கே.3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’.
நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் நடித்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

மேலும்...
http://tamilscreen.com/thittivasal-audio-launch-function/

கமல் - கௌதமி பிரிவு.... காரணம்... ஸ்ருதிஹாசன்?



கமல்ஹாசனும் நானும் பிரிந்துவிட்டோம் என்ற கௌதமியின் அறிவிப்புதான் திரையுலகில் இன்றைய பரபரப்பு செய்தி.
கடந்த 13 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல்... தாலி கட்டாத மனைவியாக.... கமல் உடன் வாழ்ந்த கௌதமி  கமலிடமிருந்து விலகுவதாக தன்னுடைய பிளாகில் (வலைப்பூ)  அறிவித்துள்ளார்.
குருசிஷ்யன் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான கௌதமி  1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற வட இந்தியரை திருமணம் செய்து கொண்டு, சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தைக்கும் தாயானார்.
1999 ஆம் ஆண்டில் சந்தீப்பை விவாகரத்து செய்த கெளதமி சில வருடங்களுக்குப் பிறகு கமல் உடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.

மேலும்...

http://tamilscreen.com/life-and-decisions-of-gautami/

Thursday, 13 October 2016

சிவகார்த்திகேயன் அழுகை... ரெமோ படத்துக்கு நல்லதா... கெட்டதா?



சிவகார்த்திகேயன் நடித்து அண்மையில் வெளியான ரெமோ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ரெமோ படத்தின் வெற்றிக்குக் காரணம் ஊடகங்கள்தான் என்று நம்பும் சிவகார்த்திகேயன் மற்றும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் நன்றி விழா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ரெமோ படக்குழுவினர் அனைவரும் மேடையில் வீற்றிருக்க, சிவகார்த்திகேயன் பேசும்போது, தனக்கு சிலர் நெருக்கடி கொடுப்பதாக சொல்லி கண்ணீர்விட்டார்.

மேலும்...
http://tamilscreen.com/sivakarthikeyan-sentiment-2/

Wednesday, 12 October 2016

சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி… வேடிக்கைப் பார்க்கும் நடிகர் சங்கம்….




சிவகார்த்திகேயனுக்கும்… 24 AM STUDIOS  தயாரிப்பாளரும் சிவகாரத்திகேயனின் நண்பருமான ஆர்.டி.ராஜாவுக்கும் ரெமோ ரிலீஸுக்கு முந்தைய நாள் பிரச்சனை.
சிவகார்த்திகேயனின் மனைவி கணக்கு கேட்டதால் நட்பு முறிந்தது.
ரெமோ படம் 8 கோடி ரூபாய் டெபிஸீட்டில் ரிலீஸ் ஆகியிருக்கிறது…
ஏ.எம்.ரத்னம் 8 கோடி கொடுத்ததால்தான் படமே ரிலீஸ் ஆனது. இல்லை என்றால் ரெமோ படமும் ரஜினி முருகன் படம் போல் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் போயிருக்கும்…
சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே  குறைவான வசூல் இந்தப்படத்துக்குத்தான்…

– என ரெமோ படம் குறித்து செய்திகளும்… வதந்திகளும் காதுக்கு வந்து கொண்டே இருக்க….


மேலும்...

http://tamilscreen.com/remothanksgivingmeet/

Tuesday, 11 October 2016

சினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக.



சினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக.
‘என் கதை’  
ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…
அத்தியாயம் – 23

படம் எடுக்கப் பணம்தான் மூலதனம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நானும் அப்படித்தான்- பணம் இருந்தால்தான் படம் எடுக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் பல பேர் கையில் பத்து பைசா இல்லாமலேயே தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த உண்மை ஆரம்பத்தில் எனக்குத் தெரியாது.
நான் சொல்லப் போகும் இந்த சம்பவத்துக்குப் பிறகே தெரிந்து கொண்டேன்.
கையில் பணம் இல்லாமல் படம் எடுக்க வருபவர்கள் நம்புவது என்னைப் போன்ற நடிகைகளைத்தான். அதாவது எங்களின் உடம்பை.

நாங்கள்தான் அவர்களுக்கு அட்சய பாத்திரம்.

மேலும்...

http://tamilscreen.com/enkathai23/

ரீல் ஹீரோ படங்களுக்கு மத்தியில் 100 கோடி வசூலித்த ரியல் ஹீரோ படம்..



என்னதான் ரீல் ஹீரோக்களை மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடினாலும் ரியல் ஹீரோக்களையும் கொண்டாட மறப்பதில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘எம்.எஸ்.தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது.

அந்தப் படத்தைத்தயாரித்தவர்களே இப்படி ஒரு வரவேற்பும் வசூல்மழையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மேலும்...
http://tamilscreen.com/msdhoni-collection/

அடுத்த முதல்வர் அஜித்…. – ஆர்வக்கோளாறு ரசிகர்களின் வேலையா? அஜித்தின் அடிமன ஆசையா?



சினிமாவில் ஒன்றிரண்டு காட்சிகளில் அதுவும் அவுட்ஆஃப் போகஸில் தலைகாட்டிய விருச்சிககாந்த்களுக்கே அரசியலில் நுழைந்து முதல் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருக்கும்போது, தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித்குமாருக்கு முதல் அமைச்சர் ஆசை இல்லாமல் இருக்குமா?
அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று கிராமத்துப் பக்கம் சொல்வார்கள்.

மேலும்...
http://tamilscreen.com/ajith-next-cm/

றெக்க – விமர்சனம்


தமிழ்சினிமாவின் கதாநாயக இலக்கணத்துக்குள் அடங்காத ஹீரோவாக… யதார்த்தமான கதைகளில்… கதாபாத்திரங்களில் நடித்தே ரசிகர்களை சேர்த்த விஜய்சேதுபதிக்கு ஆக்ஷன் ஹீரோவாய் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது.
றெக்க…. மொக்க…. என்று ரைமிங்காக யாரும் கமெண்ட் அடித்துவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வோடு பக்கா கமர்ஷியலாய் ஒரு கதை பண்ணி, விஜய்சேதுபதியை மாஸ் ஹீரோவாக ‘றெக்க’ கட்டி பறக்கவிட்டிருக்கிறார் இயக்குநர் ரத்தின சிவா.

காதலர்களுக்கு வீட்டில் எத்தனை எதிர்ப்புவந்தாலும் அதையும் மீறி அவர்களை சேர்த்து வைப்பதுதான் வக்கீல் விஜய்சேதுபதியின் வேலை.

மேலும்...

http://tamilscreen.com/rekka-review/

தேவி – விமர்சனம்


ஏறக்குறைய பேய்ப்பட சீசன் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்ட நேரத்தில் தேவி என்றொரு பேய்ப்படத்தை எடுத்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.
என்ன தைரியத்தில் இப்படியொரு படத்தை எடுத்தார் என்றே தெரியவில்லை.
பேய்ப்படம் என்றால் பார்வையாளனை அலற வைக்க வேண்டும்.
தேவி படமோ அலற வைக்காமல், எப்படா படம் முடியும் என்று அழ வைக்கிறது.

12 வருடங்களுக்கு முன்பே மார்க்கெட் இழந்த பிரபுதேவா ஹீரோ.

மேலும்...
http://tamilscreen.com/devi-review/

ரெமோ – விமர்சனம்



நிச்சயமான பெண்ணை காதலிப்பவன் நிஜ வாழ்க்கையில் கெட்டவன். சினிமாவிலோ ஹீரோ.
தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (ஹிந்தி), மின்னலே, காதல் மன்னன் என்று பல படங்களில் பார்த்த பழைய கதைக்கு அவ்வை சண்முகி, ஆணழகன் மேக்கப் போட்டு ‘ரெமோ’வாக்கி இருக்கிறார் அட்லீயின் சிஷ்யரான அறிமுக இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்.

நாடகத்தில் நடித்து காலம் தள்ளிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசை.

மேலும்...
http://tamilscreen.com/remo-review/

அம்மா ஐ.சி.யூ.வில்… – ஆனாலும் ‘வரிவிலக்கு வசூல் வேட்டை’ தொடர்கிறது…



தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று மு.கருணாநிதி தொடங்கி வைத்த வியாபாரம்தான் இந்த – வரிவிலக்கு வசூல் வேட்டை.
ஏறக்குறைய சதுரங்க வேட்டைக்கு சற்றும்  சளைத்தது அல்ல, இந்த வரிவிலக்கு வசூல் வேட்டை.
வணிகவரித்துறையின் அமைச்சர் தொடங்கி, அதிகாரிகள், பியூன் வரை செமத்தியாய் கல்லா கட்டுகிற பிசினஸ் இது.

தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தி.மு.க.ஆட்சியில் கருணாநிதி அறிவிக்க, வணிகவரித்துறை அமைச்சருக்கு அது அட்ஷய பாத்திரமாக மாறியது.

மேலும்...
http://tamilscreen.com/taxfree-for-released-movies-2/

Friday, 30 September 2016

அட்வான்ஸ் தர தாமதம்… தயாரிப்பாளருக்கு அபராதம் போட்ட தமன்னா….



சினிமாவில் எல்லா காலத்திலும் இளிச்சவாயன் யார் என்றால் தயாரிப்பாளர்கள்தான்.
சொந்தப்பணத்தில் படம் எடுத்த காலத்தில் ஹீரோக்கள் முதல்  தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் முதலாளியாக… மரியாதைக்குரியவர்களாக இருந்தார்கள் – தயாரிப்பாளர்கள்.
காலப்போக்கில் சொந்தப் பணத்தைப் போட்டு படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து போனது… பின்னர் மறைந்தும் போனது.

பைனான்சியரிடம் பணம் வாங்கி படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர்களாக பவனி வரத் தொடங்கியதும் அவர்களின் மரியாதையும் மங்கிப்போனது.

மேலும்...
http://tamilscreen.com/tamannah-news/

தேவி படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை… அக்டோபர் 7 வெளியாவதில் சிக்கல்…



இன்றைய தேதியில் இளைஞர்களின் ஆதர்ஷ ஹீரோ சிவகார்த்திகேயனும், விஜய்சேதுபதியும்தான்.
இளைஞர்களில் ஒரு சாரர் சிவகார்த்திகேயனை விரும்புகிறார்கள் என்றால்…
இன்னொரு சாரர் விஜய்சேதுபதியை வெறித்தனமாக விரும்புகிறார்கள்.

அன்றைய கமல் – ரஜினி, இன்றைய அஜித் – விஜய் போல், சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் கூட்டம் வளர்ந்து வருகிறது.

மேலும்...

http://tamilscreen.com/devi-release-date-problem/

அவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான்.


அவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான்.
‘என் கதை’  
ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…
அத்தியாயம் – 22

லண்டனில் ஸ்டார் நைட்.
நான் இதற்கு முன் வெளிநாடு சென்றதில்லை. இதுதான் முதல் வெளிநாட்டு பயணம்.
என்னை விட அம்மாவுக்குத்தான் வெளிநாடு போக வேண்டும் என்று கொள்ளை ஆசை.
படங்களில் என்னை புக் பண்ண வரும் புரட்யூஸர்களிடம் எல்லாம், “ஸாங் எல்லாம் எங்கே எடுக்கப் போறீங்க?” என்று கேஷுவலாகக் கேட்பாள்.

‘வெளிநாட்டில் என்று சொல்ல மாட்டார்களா…?’ என்ற நப்பாசைதான்.

மேலும்...

http://tamilscreen.com/enkathai22/

நேற்று நடிகை அபி…! இன்று நடிகை அதிதி…! – வளரும் நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடும் நடிகர்


சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்காக கோடம்பாக்கத்தில் வந்திறங்கும் பலருக்கும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அடிமனதில் ஒரு ‘லட்சியம்’ இருக்கவே செய்யும்.
பணம், புகழ் சம்பாதிப்பதைவிட திகட்ட திகட்ட தினம் தினம் பெண்களை அனுபவிக்கலாம் என்பதே அந்த லட்சியம்.

சினிமாவில் ஜெயித்த பிறகு இந்த லட்சியத்தை அடைகிறவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் முதல் படத்தில் நடிக்கும்போதே இந்த லட்சியத்துக்காக நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு திரிகிற ஆட்களும் இருக்கிறார்கள்.

மேலும்...
http://tamilscreen.com/abi-saravanan-story/

எம்.எஸ்.தோனி (M.S. Dhoni: The Untold Story) - விமர்சனம்


இன்றைய சினிமாக்கள் குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளுடன் பார்க்க தகுதியற்றவை.
அடடா... இந்தப் படத்தை பார்க்க நம் பிள்ளைகளை அழைத்து வரவில்லையே என்று எண்ணவும், ஏங்கவும் வைக்கும் படமாக வெளிவந்திருக்கிறது - ‘எம்எஸ்.தோனி’.
மில்கா சிங், மேரி கோம், பான் சிங், அசார் என விளையாட்டுத்துறை பிரபலங்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இதற்கு முன் எத்தனையோ பயோபிக் வகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும்...
http://tamilscreen.com/m-s-dhoni-the-untold-story-review/

Tuesday, 27 September 2016

ஆண்டவன் கட்டளை – விமர்சனம்



‘காக்கா முட்டை’யில் ஜெயித்து ‘குற்றமே தண்டனை’யில் சறுக்கிய இயக்குநர் மணிகண்டனின் மூன்றாவது படம்.
வெகுஜன ஹீரோவின் கால்ஷீட் கிடைத்ததும் அஞ்சு ஃபைட்டு, ஆறு பாட்டு என மசாலாத்தனமாக சிந்திப்பதுதான் தமிழ்சினிமா இயக்குநர்களின் வழக்கம்.

மணிகண்டனோ, மசாலாப்பட மாயைக்குள் மாட்டிக்கொள்ளாமல் விஜய்சேதுபதியை வைத்துக் கொண்டு, தன்னுடைய பாணியிலிருந்து இம்மியளவும் தடம் மாறாமல் ‘ஆண்டவன் கட்டளை’யைக் கொடுத்திருக்கிறார்.

மேலும்...

http://tamilscreen.com/aandavan-kattalai-review/

தொடரி – விமர்சனம்


பிரபுசாலமன் கையில் எடுக்கும் கதைகளில் கண்டிப்பாக காதல் இருக்கும். ஆனால் கதையிலும், கதைக்கான பின்புலத்திலும் படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கும்.
‘மைனா’வில் மேற்குதொடர்ச்சி மலை, ‘கும்கி’யில் காட்டுயானைகள் நடமாடும் மலைக்கிராமம், ‘கயல்’ படத்தில் சுனாமி என படத்தை சுவாரஸ்யப்படுத்த புதுசாக யோசிக்கும் இயக்குநர் பிரபுசாலமன் ‘தொடரி’க்கு தேர்ந்தெடுத்தது டெல்லியிருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயிலை.

மேலும்...

http://tamilscreen.com/thodari-review/

கஞ்சா கருப்பு மீது மானநஷ்ட வழக்கு…! – கோர்ட்டுக்குப் போகிறார் முன்னாள் மானேஜர்…!



கஞ்சா கருப்புவை ராம் படத்தில் காமெடியனாக அமீர் அறிமுகப்படுத்தியபோது அவர் வெள்ளாந்தியான ஆள்.
சினிமா உலகின் சூட்சுமங்களை அறியாதவராக இருந்த கருப்புவுக்கு மானேஜராக இருந்து வழிநடத்தியது முன்னணி பி.ஆர்.ஓ.க்களில் ஒருவரான வீ.கே.சுந்தர்.

சில பல படங்களில் நடித்து காமெடி நடிகனாக பிரபலமான பிறகு கஞ்சா கருப்புவுக்கும், வீ.கே.சுந்தருக்கும் முட்டிக் கொண்டது.

மேலும்...

http://tamilscreen.com/kanja-karuppu-news/

ஒரே படத்தில் இரண்டு பேருக்கு நிவாரணம்…! – இது விஜய்சேதுபதி ஸ்டைல்…




‘ரேனிகுண்டா’ ‘வயது 18’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் பன்னீர் செல்வம்.
ரேணிகுண்டா படத்தில் மிகப்பெரிய பெயர் கிடைத்தது இவருக்கு.
அதை தக்க வைத்துக்கொள்ள தவறிவிட்ட பன்னீர் செல்வம் ஒருகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் மீண்டும் லிங்குசாமியிடம் ஐக்கியமானார்.

அவருடைய கதை விவாதங்களில் கலந்து கொண்டபடி காலத்தைத்தள்ளிய பன்னீர்செல்வத்துக்கு தன்னுடைய உறவினரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தார் லிங்குசாமி.

மேலும்...

http://tamilscreen.com/vijaysethupathy-news/